/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவபாரதி பள்ளி மாவட்ட அளவில் சாதனை
/
சிவபாரதி பள்ளி மாவட்ட அளவில் சாதனை
ADDED : மே 12, 2024 05:29 AM

விருத்தாசலம்: சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 40 மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். அதில், மாணவி ஆர்த்தி 495 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் மூன்றாமிடம், பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
மாணவி சுபஸ்ரீ 483 பெற்று இரண்டாமிடம், மாணவிகள் நட்சத்திரா 480, கலையரசி 480 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 16 மாணவர்களும், கணித பாடத்தில் 5 பேர், அறிவியல் பாடத்தில் ஒருவரும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் சிவனேசன், முதல்வர் ஆனந்த பாஸ்கர் ஆகியோர் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.