சி.என்.பாளையத்தில் சுடுகாடு நிலம் அளவீடு: ஆர்.டி.ஓ., ஆய்வு
சி.என்.பாளையத்தில் சுடுகாடு நிலம் அளவீடு: ஆர்.டி.ஓ., ஆய்வு
ADDED : செப் 18, 2026 07:22 PM
நடுவீரப்பட்டு, செப்.19–
சி.என்.பாளையத்தில் சுடுகாடு மற்றும் இறுதி சடங்கு கொட்டகை கட்ட வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்யப்பட்டது.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அருந்ததியர் பகுதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாடு இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கிடவும், இறந்தவர்களிவன் இறுதி சடங்கு செய்ய கொட்டகை கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று முன்தினம் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.அதனடிப்படையில் நேற்று மாலை கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், தாசில்தார் ராஜேஷ்பாபு, சர்வேயர் திவாகர், வி.ஏ.ஓ.,தமிழரசன் ஆகியோர் சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்து புல தணிக்கை செய்தனர். அப்போது, விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர்.
ஆய்வின் போது விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டக்குழு அரசன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் துரை, வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகக்குழு குளோப் உடனிருந்தனர்.
