/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காரில் கஞ்சா கடத்தல்: வாலிபர் கைது
/
காரில் கஞ்சா கடத்தல்: வாலிபர் கைது
ADDED : மே 02, 2024 11:19 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே காரில் கஞ்சா கடத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் மேல்பட்டாம்பாக்கம்- சித்தரசூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பிகோ காரை நிறுத்த முயன்றனர். கார் நிற்காமல் சென்றதால், போலீசார் சிறிது துாரம் விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.
காரில் இருந்த 4 பேரில், 3 பேர் தப்பினர். பிடிபட்டவர் நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயகணேஷ்,26; என்பது தெரிந்தது. காரை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. மேலும், இருக்கையின் அடியில் 250 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர்.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஜெயகணேைஷ கைது செய்தனர். சாராயம், கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பி.என்.பாளையம் முருகானந்தம் மகன் முகிலன், 25; கடலுார், கே.என்.பேட்டை ராஜ்குமார் மகன் முருகானந்தம்,24; வாழப்பட்டு கணேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
முன்னதாக, இந்த கும்பல், மேல்பட்டாம்பாக்கத்தில் பைக்கில் சென்ற கனிசப்பாக்கத்தை சேர்ந்த விவசாயி வசந்த்,36; என்பவரிடம் 2,000 ரூபாயை வழிப்பறி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.