/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துப்பாக்கி சுடும் போட்டி பெண் காவலர் வெற்றி
/
துப்பாக்கி சுடும் போட்டி பெண் காவலர் வெற்றி
ADDED : ஜூன் 24, 2024 05:43 AM

கடலுார் : நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய பெண் தலைமை காவலர் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார்.
தமிழக காவல்துறையில் பெண் போலீசாரின் 50வது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு, ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிர பயிற்சி பள்ளியின் துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்தது.
மாநில காவல்துறை அணிகள், மத்திய பாதுகாப்பு காவல் அணிகள் மற்றும் யூனியன் பிரதேச அணிகள் என, மொத்தம் 30 அணிகளை சேர்ந்த 453 பேர் பங்கேற்றனர்.
இதில், தமிழக காவல் துறை முதலிடம் பிடித்து 5 கேடயம், 11 பதக்கங்கள் பெற்றது. நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரி 300 யார்ட்ஸ் இன்சாஸ் துப்பாக்கி சுடும் பிரிவில் 100க்கு 86 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். இவருக்கு எஸ்.பி.,ராஜாராம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.