/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு; சமூக நலத்துறை கருத்தாய்வு
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு; சமூக நலத்துறை கருத்தாய்வு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு; சமூக நலத்துறை கருத்தாய்வு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு; சமூக நலத்துறை கருத்தாய்வு
ADDED : ஜூலை 04, 2024 11:47 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் ஒன்றியத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சமூக நலத்துறை சார்பில் கருத்தாய்வு கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தாய்வு கூட்டம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் மலர் முருகன் தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., சீனிவாசன் வரவேற்றார்.
சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் ஆண்டாள், ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு ஆலோசகர் கனிமொழி, மூத்த ஆலோசகர் அமுதா, கணக்காளர் தம்புராஜ் ஆகியோர் சமூக நலத்துறையின் கீழ் பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்து பேசினர்.
அதில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களுக்கான சலுகைகள், உதவித்தொகை, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் ரீதியான அத்துமீறல் உள்ளிட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், விருத்தாசலம் வட்டாரத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் பெண் குழந்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் குறித்த ஏற்றத்தாழ்வுகள் மறைய கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
சமூக நலத்துறையின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். விரிவாக்க அலுவலர் பாரதி நன்றி கூறினார்.