ADDED : ஆக 08, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த நல்லாத்துாரை சேர்ந்த வேணுகோபால் மகன் தேவராஜ், 22; பி.பி.ஏ., பட்டதாரி. இவர் புதுச்சேரி எம்.ஆர்.எப். கம்பெனியில் வேலை செய்து வந்தார். காதல் தோல்வியால் மனமுடைந்திருந்த தேவராஜ், சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை.
இதுகுறித்து தாய் திலகம் கொடுத்த புகாரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.