ADDED : ஏப் 29, 2024 04:15 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு பாலுார் அருகே மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
நடுவீரப்பட்டு அருகே பாலுார் அடுத்த பெரியநரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜமுகம். இவரது மகன் கிருஷ்ணன், 20; கடந்த 25ம் தேதி, தந்தை திட்டியதால் வீட்டை விட்டு கோபித்து சென்றவரை காணவில்லை.
இதுகுறித்து ராஜமுகம் கொடுத்த புகாரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
