ADDED : மே 15, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மகேஷ், 22; புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 12ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மகேைஷ காணவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை முத்து கொடுத்த புகாரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.