ADDED : மே 24, 2024 05:24 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை வட்டார சமுதாய சுகாதார நிலையத்தில், மூன்று நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் துவங்கியது.
வட்டார மருத்துவர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் பிரதாப், ராமநாதன், சரவணன் உள்ளிட்ட குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். அதில், விருத்தாசலம் ஒன்றிய ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.
முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தொற்றா நோய், கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்து, அதற்குரிய சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்பட்டது. பி.டி.ஓ.,க்கள் ராதிகா, சீனிவாசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், முல்லைநாதன், பரத் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.