ADDED : மே 02, 2024 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : மழை பெய்ய வேண்டி, பரங்கிப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தமிழகத்தில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை இல்லாமல் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய வேண்டி, பரங்கிப்பேட்டையில், ஜாக் அமைப்பின் சார்பில், வாத்தியாபள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட தலைவர் முஹம்மது வலீத் தலைமை தாங்கினார். தொழுகையை, அகமது அலி முன்னின்று நடத்தினார்.

