/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
/
மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
ADDED : பிப் 28, 2025 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் குழந்தை சுவாமி சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து அமுது படையல் நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர். அதேபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.