ADDED : ஆக 05, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று ஆடி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து அமுது படையல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர்.
பூஜை ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம், உபயதாரர் கே.என்.பேட்டை இதயநிதி மற்றும் விழாக்குழவினர் செய்திருந்தனர்.