ADDED : ஜூன் 06, 2026 09:41 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை கையாள்வது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது.
கடலுார் மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் என்.டி.பி.எஸ்.,நீதிமன்ற அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரகுபதி பங்கேற்று என்.டி.பி.எஸ்.,வழக்குகளின் விசாரணை, சாட்சியங்கள் சேகரித்தல் பறிமுதல் நடவடிக்கைகள், ஆவணப்படுத்துதல், கோர்ட் நடைமுறைகள் மற்றும் வழக்குகளில் ஏற்படும் பொதுவான நடைமுறை சிக்கல்கள் குறித்துப்பேசினார்.
என்.டி.பி.எஸ்., வழக்குகளில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் அவற்றை திறம்பட கையாளும் முறைகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஏ.டி.எஸ்.பி.,கோடீஸ்வரன், ரகுபதி, டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
