/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 02, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி,- புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
இதனையொட்டி, காலை 11.00 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிேஷக ஆதராதனை நடத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை விழா குழுத் தலைவர் ஆறுமுகம், செயலர் பாலசுப்மரணியன், பொருளாளர் ராம்குமார் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சந்தன காப்பு அலங்காரமும் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர்.