/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலக நன்மை வேண்டி ஆன்மிக உபன்யாசம்
/
உலக நன்மை வேண்டி ஆன்மிக உபன்யாசம்
ADDED : பிப் 28, 2025 05:03 AM

கடலுார்: கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், உலக நன்மை வேண்டி நாம சங்கீர்தனம் மற்றும் ஆன்மிக உபன்யாசம் நடந்தது.
நிகழ்ச்சியில், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை மகா மந்திர கீர்த்தனம் நடந்தது. இதை தொடர்ந்து, மஹாரண்யம் முரளீதர சுவாமிஜியின் சத்சங்கம் நடந்தது. இதில், முரளீதர சுவாமிஜி கலந்து கொண்டு, உலக நன்மை வேண்டி நாம சங்கீர்தனம், ஆன்மிக உபன்யாசம் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வானமாதேவி ஆடிட்டர் ரவி குடும்பத்தினர் மற்றும் கடலுார் ரெட்டி நல சங்கம், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி ஆகியோர் செய்திருந்தனர். இன்றும், நாம சங்கீர்த்தனம் மற்றும் ஆன்மிக உபன்யாசம் நடக்கிறது.

