/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி பள்ளியில் விளையாட்டு போட்டி
/
கிருஷ்ணசாமி பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : ஆக 23, 2024 12:29 AM
கடலுார்: கடலுார் அடுத்த எஸ்.குமாரபுரம் கிருஷ்ணசாமி வித்யாநிகேதன் சி.பி.எஸ்.இ., பள்ளியில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இடையேயான இண்டர் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மீட் கேம் ஆன் 24 போட்டிகள் நடந்தது.
பள்ளி நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் ் துவக்கி வைத்தனர். போட்டியில் 11 பள்ளிகளை சேர்ந்த 378 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். துரோபால், வாலிபால், நீளம் தாண்டுதல், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், ரிலே ரேஸ், குண்டு எறிதல், தட்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் ஜூனியர், சீனியர் பிரிவுகளாக மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும்வழங்கப்பட்டது. காமாட்சி சண்முகம் பள்ளி பெண்கள் பிரிவிலும், பி.எஸ்.பி.பி., மில்லினியம் ஆண்கள் பிரிவிலும் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
அப்போது, பள்ளி முதல்வர் எலிசபெத் ஜோசப், ஒருங்கிணைப்பாளர்கள் ரொமிலா வின்சன், அரங்கநாயகி மற்றும் நிர்வாக அதிகாரி சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுதிர், ஸ்ரீமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.