/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜவஹர் கல்லுாரியில் விளையாட்டு விழா
/
ஜவஹர் கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : மார் 12, 2025 11:51 PM

மந்தாரக்குப்பம், : நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் மற்றும் கல்லுாரி செயலாளர் ஸ்ரீ பங்கஜ் குமார் தலைமை தாங்கினார்.
என்.எல்.சி., பொது மேலாளர் மற்றும் கல்லுாரி உதவிசெயலாளர் அறிவு முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் கிப்ட் கிரிஸ்டோபர் தன்ராஜ் வரவேற்றார்.
அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித் துறை தலைவர் ராஜசேகரன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
ஓட்டப்பந்தயம், கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், கபடி, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.