/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நாளை துவக்கம்
/
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நாளை துவக்கம்
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நாளை துவக்கம்
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நாளை துவக்கம்
ADDED : செப் 09, 2024 05:20 AM
திட்டக்குடி: தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாளை 10ம் தேதி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் துவங்குகிறது.
கடலுார் மாவட்ட கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு. தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள், நாளை 10ம் தேதி முதல் துவங்கிறது. அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் (12 வயது முதல் 19 வயது வரை) நாளை 10ம் தேதி துவங்கி செப். 14ம் தேதி வரை நடக்கிறது. கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் (17வயது முதல் 25வயது வரை) செப்.17ம் தேதி துவங்கி செப்.19ம் தேதி வரை நடக்கிறது.
செப்.20ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான(வயதுவரம்பு இல்லை) போட்டிகளும், செப். 21 மற்றும் 22ம் தேதி அரசு ஊழியர்களுக்கான போட்டிகளும், செப்.23 மற்றும் செப்.24ம் தேதி, பொதுப்பிரிவுக்கான (15வயது முதல் 35வயது வரை) விளையாட்டுப்போட்டிகளும் நடக்கிறது.
போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்த கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.
பள்ளி மற்றும் கல்லுாரி பிரிவு மாணவர் அடையாள அட்டை, பள்ளி, கல்லுாரியில் பயில்வதற்கான சான்று, ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். அரசுப்பணியாளர்கள் அடையாள அட்டை, பணிபுரிவதற்கான சான்று, ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். பொதுப்பிரிவில் கலந்துகொள்பவர்கள் இருப்பிடச்சான்று, பிறந்த தேதியுடன் கூடிய ஆதார்அட்டை நகல் எடுத்துவர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்து கொள்பவர்கள் அதற்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகலுடன் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.