/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மாநில அளவில் சாதனை: கல்வி குழும தலைவர் பெருமிதம்
/
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மாநில அளவில் சாதனை: கல்வி குழும தலைவர் பெருமிதம்
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மாநில அளவில் சாதனை: கல்வி குழும தலைவர் பெருமிதம்
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மாநில அளவில் சாதனை: கல்வி குழும தலைவர் பெருமிதம்
ADDED : மே 28, 2024 11:26 PM

விருத்தாசலம் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தின், ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 1981ல் நர்சரி, பிரைமரி பள்ளியாக துவக்கப்பட்டது. மெட்ரிக் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, ஆலிச்சிக்குடி சாலையில் இயங்கி வருகிறது.
இங்கு, 2017 முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ் வழி கல்வி அளிக்கப்படுகிறது. 2023 முதல் சி.பி.எஸ்.சி., துவக்கப்பட்டது. விடுதி வசதி உள்ளது.
மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்க கடந்த ஆண்டு முதல் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல், டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்வி குழுமத்தின் மற்றொரு அங்கமான சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, விருத்தாசலம் அடுத்த எருமனுாரில் 2009ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இங்கு, கல்வி யியல் கல்லுாரியும் செயல்படுகிறது. சி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரி, 2023ம் ஆண்டு முதல் இந்துமதி சுரேஷ் கல்வியியல் கல்லுாரியாக பெயர் மாற்றப்பட்டு இயங்குகிறது. நடப்பாண்டு பாரா மெடிக்கல் கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் நலன் கருதி, அனைத்து ஊர்களுக்கும் இலவசமாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் 550க்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி கல்வி கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 501 முதல் 550 வரை பெற்றவர்களுக்கு 75 சதவீதம், 451 முதல் 500 பெற்றவர்களுக்கு 50 சதவீதம், 401 முதல் 450 பெற்ற மாணவர்களுக்கு 25 சதவீதம் கல்வி கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கல்லுாரியில் இளங்கலை இயற்பியல், வேதியியல் மற்றும் கணித துறைகளில் சேரும் மாணவர்களுக்கு முதல் பருவ கட்டணம் முற்றிலும் இலவசம்.
விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை அளிக்கப்படுகிறது.
மேலும், இந்த கல்வி நிறுவனத்தில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., ஜெனரல், பி.காம்., சி.ஏ, பி.பி.ஏ., பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல் , பி.சி.ஏ., பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட இளங்கலை படிப்புகளும், எம்.ஏ., ஆங்கிலம், எம்.காம்., ஜெனரல், எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட முதுகலை படிப்பு களும் பயிற்றுவிக்கப்படுகிறது.
எங்கள் கல்வி குழுமம், அரசு பொது தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி சாதனை படைத்து வருகிறது.
இந்த ஆண்டு, ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ 497 பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என, கல்வி குழுமத்தின் தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.