/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீராகவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீராகவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : மே 14, 2024 05:34 AM

விருத்தாசலம்: அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த மேல நெடுவாய் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீராகவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
முதுகுளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட யாதவ குலத்தவர்களின் குல தெய்வமான ஸ்ரீராகவ பெருமாள், ஐயனார், கருப்புசாமி கோவில்களில் நேற்று காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கும்பாபி ேஷகம் நடந்தது.
அதையொட்டி, யாகசாலை பூஜைகளுடன் காலை 9:30 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 10:00 மணியளவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
விருத்தாசலம் மூத்த வழக்கறிஞர் ஜெயக்குமார், திருச்சி வேல்முருகன், முதுகுளம் பாஸ்கரன், வழக்கறிஞர் காமராஜ் பங்கேற்றனர்.

