/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
/
எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 08, 2024 11:48 PM

சேத்தியாத்தோப்பு : எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி பிளஸ்2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 273 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி ரெஜினா பேகம் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், ஹரிஹரன் 582 பெற்று இரண்டாம் இடம், லெவின் பிரின்ஸ் 581 பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
570க்கு மேல் 9 மாணவர்கள், 550க்கு மேல் 24 பேர், 500 க்கு மேல் 89 மாணவர்கள் பெற்றுள்ளனர். பாடவாரியாக, கணிதம், கணிணி அறிவியல், கணக்குப்பதிவியலில் தலா இருவர், பொருளியல், வணிகவியல், கணிணி பயன்பாடுகள், வணிகக்கணிதம் ஆகிய பாடங்களில் தலா ஒரு மாணவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். தமிழில் நான்கு மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெறறனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை, பள்ளி நிர்வாக அதிகாரி தீபக் தாமஸ் கேடயம் மற்றும் பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.