/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி ஆண்டு விழா
/
கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி ஆண்டு விழா
ADDED : மார் 10, 2025 12:23 AM

கடலுார்; கடலுார் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா நடந்தது.
கல்லுாரி செயலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். முதல்வர் அருமைசெல்வம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் பேசுகையில், 'தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.
பெற்றோருக்கு நன்றி உள்ளவா்களாக இருக்க வேண்டும். பெற்றோரை காயப்படுத்தக் கூடாது' என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகங்கள் உதவி ஆய்வாளர் வெண்ணிலா பேசினார்.
விழாவில் மூத்த துணைத் முதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் சேவியர், கல்விப்புல முதன்மையர் அலெக்ஸ், விளையாட்டு இயக்குநர் சார்லஸ் எடிசன், துணை முதல்வர்கள் வித்யா, ஜேம்ஸ்மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.