/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைக்கு பெயர் சூட்டி ரூ.500 வழங்கிய ஸ்டாலின்
/
குழந்தைக்கு பெயர் சூட்டி ரூ.500 வழங்கிய ஸ்டாலின்
ADDED : பிப் 22, 2025 09:31 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் வழியாக சென்ற முதல்வர் ஸ்டாலின், ஆண் குழந்தைக்கு உதயசூரியன் என பெயர் சூட்டினார்.
வேப்பூர் அடுத்த திருப்பயரில் நேற்று நடந்த 'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் பங்கேற்க நெய்வேலியில் இருந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில், நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் வரவேற்பு கொடுத்தனர்.
நேரமின்மை காரணமாக, வேனில் இருந்து இறங்காமல் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி புறப்பட்டார். அப்போது, இன்பராஜ், ஸ்டெல்லா மேரி தம்பதி, கைக்குழந்தையுடன் ஓடி வருவதை பார்த்து, வேனை நிறுத்திய முதல்வர் ஸ்டாலின், அவரிடம் என்ன வேண்டும் என்றார்.
அதற்கு, குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றதும், குழந்தையின் பாலினத்தை கேட்டறிந்து, உதயசூரியன் என பெயர் சூட்டி, ரூ.500 பரிசு வழங்கினார்.

