/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் மாநில அளவிலான பிஸ்ட்டு பால் போட்டி
/
விருதையில் மாநில அளவிலான பிஸ்ட்டு பால் போட்டி
ADDED : ஆக 29, 2024 07:48 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலை பள்ளியில், மாநில அளவிலான 8வது சீனியர் பிரிவு மாணவர்களுக்கு பிஸ்ட்டு பால் விளையாட்டு போட்டி நடந்தது.
அகில இந்திய பிஸ்ட்டு பால் சங்கத்தின் செயலாளர் பால விநாயகம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் லுார்து ஜெயசீலன் வரவேற்றார்.
போட்டியில், ஆண்கள் பிரிவில் நாமக்கல், சென்னை, கடலுார் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், பெண்கள் பிரிவில் சென்னை, கடலுார், அரியலுார் மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, பங்கு தந்தை நிர்மல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இதில், கடலுார் மாவட்ட பிஸ்ட்டு பால் சங்க இணை செயலாளர்கள் மனோகர் ,இருதய பிரகாசம் ,செந்தில்குமாரி, விஜயலட்சுமி, லதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், 16 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில், கடலுார் மாவட்ட பிஸ்ட்டு பால் சங்க செயலாளர் ராஜராஜ சோழன் நன்றி கூறினார்.

