/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 1 தேர்வில் மாநில அளவில் ராஜிவ்காந்தி பள்ளி சாதனை
/
பிளஸ் 1 தேர்வில் மாநில அளவில் ராஜிவ்காந்தி பள்ளி சாதனை
பிளஸ் 1 தேர்வில் மாநில அளவில் ராஜிவ்காந்தி பள்ளி சாதனை
பிளஸ் 1 தேர்வில் மாநில அளவில் ராஜிவ்காந்தி பள்ளி சாதனை
ADDED : மே 15, 2024 11:20 PM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில், நாட்டார்மங்கலம் ராஜிவ் காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி பிளஸ்1 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள, நாட்டார்மங்கலம் ராஜீவ் காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், பள்ளி மாணவி சங்கவி 600 க்கு 598 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்ணும், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதவியல் பாடத்தில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவி சங்கவி கூறுகையில். எனது பெற்றோர், சண்முகம்-கவிதா இருவரும் அரசு பள்ளியில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பிளஸ் 1 தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கையில் படித்தேன். இரண்டாம் இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் அளித்த உறுதுணைக்கு நன்றி. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை, அன்றே படித்ததால் எனக்கு தேர்வு எழுதுவது மிகவும் எளிமையாக இருந்தது என்றார்.
மாணவி சங்கவியை பள்ளி நிறுவனர் மணிரத்தினம், தாளாளர் சுதா மணிரத்தினம், இயக்குனர் கமல் மணிரத்தினம் ஆகியோர் பாராட்டினர்.