ADDED : ஜூன் 25, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம், ஜூன் 26 –
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில், மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம்,எக்ஸிகியூடிவ் பட்ட படிப்புகள், மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு, கடந்த மே 1 ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கி நடந்தது வருகிறது. இந்நிலையில், வரும் 30 ம் தேதி மாணவர்கள் சேர்க்கை முடிய உள்ள நிலையில், சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், வரும் 30 ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.annamalaiuniversity.ac.in மூலம் விண்ணப்பித்து சேர்க்கை செய்துகொள்ளளால் என பல்கலைகழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
