ADDED : ஏப் 11, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.
நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த சிவசங்கர் மகன் கிஷோர்,15; இவர், சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கிேஷார் படிக்காமல் ஊர்சுற்றி வந்ததை, தந்தை சிவசங்கர் கண்டித்துள்ளார். இதனால் கிஷோர் கோபித்துக்கொண்டு கடந்த 9ம் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் சிவசங்கர் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

