தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி


ADDED : ஏப் 23, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், : கடலுாரில், மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவர் இறந்தார்.

கடலுார், துறைமுகம் கிஞ்சம்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் மகன் சாமிநாதன்,17; பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியுள்ளார். இவர், கடந்த 20ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பெஞ்ச் மீது வைக்கப்பட்டிருந்த மின்விசிறி கீழே விழுந்தது.

மின்விசிறியை சாமிநாதன் சரி செய்தபொது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடன், சாமிநாதனை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், சாமிநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

புகாரின் பேரில், கடலுார், துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us