/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் பள்ளியில் மாணவர் காவல் படை
/
பெண்ணாடம் பள்ளியில் மாணவர் காவல் படை
ADDED : ஆக 13, 2024 05:57 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் காவல் படை துவங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, விருத்தாசலம் போக்குவரத்து காவல் சப் இன்ஸ்பெக்டர் முருகன், அரிமா சங்க தலைவர் சக்திவேல், பொருளாளர் பாண்டியன், மாணவர் சங்க கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார்.
அழகப்பா பல்கலை., தொலைதூர கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம், மாணவர் காவல் படை பொறுப்பாளர் மணிக்கண்ணன், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், காவல் படை மாணவர்களுக்கு குற்றம் குறித்து விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, மோட்டார் வாகன சட்டம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள், பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு, அரசின் நலத் திட்டங்கள் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
பின்னர், சிறப்பு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டன.

