/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
/
கடலுார் அரசு கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லுாரி மாணவர் அமைப்பு செயலாளர் பாலா தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் மணியரசன், மாவட்ட இணை செயலாளர் வெற்றி தமிழ் முன்னிலை வகித்தனர்.
இதில் கோல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்தும், ஆபாச இணைய தளங்களை தடைசெய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, இளங்கலை மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

