/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு போட்டியில் அசத்திய மாற்றுத்திறன் மாணவர்கள்
/
விளையாட்டு போட்டியில் அசத்திய மாற்றுத்திறன் மாணவர்கள்
விளையாட்டு போட்டியில் அசத்திய மாற்றுத்திறன் மாணவர்கள்
விளையாட்டு போட்டியில் அசத்திய மாற்றுத்திறன் மாணவர்கள்
ADDED : ஆக 08, 2024 12:29 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுமைதானத்தில், பார்வை, செவி குறைபாடு, மூளை முடக்குவாதம் மற்றும் அறிவுசார்ந்த குறைபாடுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
உடற்கல்வி இயக்குனர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் இளவரசன் வரவேற்றார்.
உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகரன் ஆகியோர் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, தேர்வு செய்தனர்.
மேலும், 100 - மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், கையுந்து, எறியுந்து பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.