ADDED : மே 28, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புதிய சப் இன்ஸ்பெக்டர் முரளி பொறுப்பேற்றுக்கொண்டார்.
சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் இருந்த சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ்நிலையத்திற்கு மாறுதலாகி சென்றார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் போலீஸ் நிலையத்திலிருந்த சப் இன்ஸ்பெக்டர் முரளி, சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
