/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூப்பந்தாட்டத்தில் வெற்றி: மாணவர்களுக்கு பாராட்டு
/
பூப்பந்தாட்டத்தில் வெற்றி: மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 25, 2024 05:59 AM

கிள்ளை: மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டி, தனித்திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்குட்பட்ட உறுப்பு கல்லுாரி அணிகளுக்கு இடையே, மண்டல அளவிலான பூப்பந்தப்போட்டி, தனித்திறன் போட்டி, நீண்ட துாரம் ஓட்டப்பந்தயம், ஆணழகன் போட்டி உட்பட பல்வேறுபோட்டிகளில் சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் 8 பேர் வெற்றிப்பெற்று, அகில இந்திய பல்கலைக்கழகஅளவிலான போட்டியில் பங்குபெற்றனர்.
சாதனைப்படைத்த மாணவர்களை, கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொறுப்பு) பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் நாராயணசாமி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.