ADDED : மார் 08, 2025 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் செல்லும் சாலையை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சக்கரபாணி. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 9:30 மணிக்கு கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது, கடைக்குள் இருந்த மளிகை பொருட்கள் தீப்பிடித்து எரிய துவங்கியது. விருத்தாச்சலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்தில், ரெப்ரஜிரேட்டர் மளிகை பொருட்கள் உட்பட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருதி சேதமடைந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.