ADDED : ஆக 07, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் மாலை நேரங்களில் பெய்து வரும் திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெயில் வாட்டி வதைத்தது. பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், விருத்தாசலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் திடீர் மழை பெய்து வருகிறது.
இதனால், வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மானாவாரியாக பயிர் செய்யப்பட்டிருந்த கம்பு, வேர்க்கடலை பயிர்கள் கருகி வந்த நிலையில், திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.