/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் திடீர் கோடை மழை
/
கடலுார் மாவட்டத்தில் திடீர் கோடை மழை
ADDED : மே 08, 2024 11:33 PM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரத்தால் கோடை வெயில் சுட்டரித்து வருகிறது. கடலுார் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த சமயங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்யும்.
இந்நிலையில், நேற்று (8 ம் தேதி) முதல் 11 வரையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று கடலுார் மாவட்டத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது. வெயிலால் கடும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் கோடை மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.