/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு வெட்டும் தொழிலாளி சாவில் சந்தேகம்: போலீசில் புகார்
/
கரும்பு வெட்டும் தொழிலாளி சாவில் சந்தேகம்: போலீசில் புகார்
கரும்பு வெட்டும் தொழிலாளி சாவில் சந்தேகம்: போலீசில் புகார்
கரும்பு வெட்டும் தொழிலாளி சாவில் சந்தேகம்: போலீசில் புகார்
ADDED : மே 12, 2024 05:33 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே கரும்பு வெட்ட சென்ற தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் திரண்டு புகார் செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுாரை சேர்ந்தவர் சுரேஷ், 27; கரும்பு வெட்டும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த கங்காணி டேவிட் என்பவர் மூலம், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி சரிகா ஆகியோர் கரும்பு வெட்ட சென்றனர். நான்கு மாதமாக சுரேஷ் மனைவியுடன் அங்கு தங்கி வேலை பார்த்த நிலையில், கங்காணி டேவிட் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் சுரேஷ் நேற்று மருந்து குடித்து இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், 50க்கும் மேற்பட்டோர், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு வந்து, சுரேஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை வேலைக்கு அழைத்து சென்ற கங்காணி டேவிட்டை விசாரிக்க வேண்டும் என, முறையிட்டனர்.
இதனால், போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.