/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் துவக்கம்
/
கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் துவக்கம்
ADDED : மே 02, 2024 12:25 AM

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில், கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடந்தது.
கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த 29ம் தேதி முதல் கோடைகால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. நேற்று கிரிக்கெட் பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் கிரிக்கெட் பயிற்சியை துவக்கி வைத்தார். இதில், கடலுார், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் என மாவட்டம் முழுவதிலும் இருந்து 120 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். இதில் 14 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாம் வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பயிற்சியாளர் ராகுல், மாணவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கிறார். ஏற்பாடுகளை கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.

