/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோடைகால விளையாட்டு பயிற்சி நிறைவு விழா
/
கோடைகால விளையாட்டு பயிற்சி நிறைவு விழா
ADDED : மே 30, 2024 05:50 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கு, கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமில், மாணவர்களுக்கு கைப்பந்து, இறகுபந்து, கூடைப்பந்து, கபடி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
முகாம் நிறைவு பெற்றதையடுத்து நேற்று நிறைவு விழா நடந்தது. ஆறுமுக நாவலர் பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலர் டாக்டர் அருள்மொழிசெல்வன், விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சாரதாராம் ஓட்டல் உரிமையாளர் சுவேதாகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன் மற்றும் உடற்பயிற்சி கல்வி முதுகலை மாணவ மாணவியருக்கு சான்றிதழ வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் நன்றி கூறினார்.