ADDED : மே 13, 2026 07:11 PM
கடலுார்: கடலுார் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் தஞ்சாவூர் மண்டலக்கலை பண்பாட்டு மையம் இணைந்து கடலுார் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தியது.
தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குனர் ராஜாராமன் அறிவுறுத்தலின்படி கோடைக்கால பயிற்சி முகாம் மே 1ம் தேதி துவங்கி, மே 10ம் தேதி வரை நடந்தது.
பயிற்சி நிறைவு விழா சமீபத்தில் நடந்தது. கடலுார் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ரிமன்ராஜ் தலைமை தாங்கினார்.
ஓவிய ஆசிரியர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கலைவடிவு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினர்.
பரதநாட்டிய ஆசிரியர் சிவ வள்ளி, குரலிசை ஆசிரியர் விஜயஸ்ரீ, மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
பயிற்சி முகாமில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது முதல் 16வயது வரையிலான 200 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சிலம்ப ஆசிரியர் ரகுநாத் நன்றி கூறினார்.
