ADDED : மே 15, 2024 01:00 AM

அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கோடை கால யோகா பயிற்சி முகாம் நடந்தது.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தினமும் பல்வேறு விளையாட்டுகளுக்கு கோடைகால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று யோகா பயிற்சி நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் பயிற்சி முகாமை பார்வையிட்டார். பயிற்சியாளர் வெற்றிவேல் பயிற்சி அளித்தார்.
