ADDED : ஆக 24, 2024 06:44 AM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, கமிஷனர் அனு சிறப்புரையாற்றினர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார். இதை தொடர்ந்து, வகுப்பறைகளில் ஆய்வு செய்து, மாணவர்களின் வருகை பதிவேடு, கற்றல் திறன் குறித்து கேட்டறினர்.இத்திட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 7 லட்சத்து 1 ஆயிரத்து 617 நபர்களுக்கும், 20 முதல் 30 வயதுள்ள 2 லட்சத்து 23 ஆயிரத்து 660 பெண்களுக்கு (கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் நீங்கலாக) வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், நேற்று நடந்த முகாமில் விடுபட்ட அனைவருக்கும் வரும் 30ம் தேதி குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் துணை மேயர் தாமரைச்செல்வன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஹிரியன் ரவிகுமார், துணை இயக்குனர் பொற்கொடி, மாநகர நல அலுவலர் எழில் மதனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

