/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாமியார்பேட்டை பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
/
சாமியார்பேட்டை பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஆக 05, 2024 04:53 AM

பரங்கிப்பேட்டை,:பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர்ரெங்கம்மாள், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், ஊராட்சி தலைவர் அமுதா ராஜேந்திரன் முன்னிலைவகித்தனர்.
சேர், டெஸ்க் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், ரவி, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, முன்னாள்துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் மகேஷ், ஊராட்சி துணைத் தலைவர் பிரதாபன், கிள்ளை நகர செயலாளர்தமிழரசன், கிராம தலைவர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.