ADDED : ஜூன் 25, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : குறிஞ்சிப்பாடி வட்டா ரத்தில் முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அட்மா திட்ட மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்களை வழங்கினார். கடலூர் வேளாண இணை இயக்குனர் ஏழுமலை, குறிஞ்சிப் பாடி வட்டார உதவி இயக்குனர் மலர்வண்ணன், வடலுார் நகராட்சி சேர்மன் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணை சேர்மன் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.