ADDED : ஜூலை 06, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள், பழனியாண்டி தில்லைக்கண்ணு அறக்கட்டளை, அகர்வால் சுவீட்ஸ் நிறுவனத்தின் சுசிலா அறக்கட்டளை ஆகியன சார்பில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளைத் தலைவர் சாந்தகுமார், 300 மாணவ, மாணவிகளுக்கு 1 லட்சத்து 20,000 ரூபாய் மதிப்பில் சீருடை வழங்கினார்.
திருஞானம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சவுபாக்கியநாதன், ரத்தினசபாபதி, ஓய்வு பெற்ற அஞ்சலக மக்கள் தொடர்பு அதிகாரி தண்டபாணி, சந்திரசேகரன், அகர்வால் மேனேஜர் குமரேஷ் வாழ்த்திப் பேசினர்.