ADDED : மே 01, 2024 07:20 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் அரசு விதைப்பண்ணையில் குறுவை, சம்பா நெல் சுத்திகரிப்பு பணிகள் குறித்த கடலுார் வேளாண் இயக்குனர்கள் ஆய்வு நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் மிராளூர் அரசு விதைப்பண்ணை, வண்டுராயன்பட்டு அரசு விதைப்பண்ணை, சுத்திகரிப்பு நிலையம், நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப்பண்ணை ஆகியவைகளில் வேளாண் இயக்குனர்கள், விதை ஆய்வு இயக்குனர்கள், சான்று அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
கடலுார் வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, துணை இயக்குனர் பிரேம்சாந்தி, செல்வம், விதை சான்று உதவி இயக்குனர் விஜயா ஆகியோர் மிராளூர் அரசு விதைப்பண்ணையில் பரியிடப்பட்டுள்ள சணப்பு, தக்கை பூண்டு ஆகியவற்றையும், விதை சுத்திகரிப்பு நிலையத்தையும், நெல்குவியல்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் விதைப்பண்ணை அலுவலர்களிடம் நெல் குவியல்களை குறுவை, சம்பா பருவ விதைகளை தயார் செய்து விதைச்சான்று அட்டை பொருத்தி வேளாண் விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினர்.
இதில், புவனகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமதுநிஜாம், வேளாண் அலுவலர்கள் உண்ணாமலை, சரவணன், விதைச்சான்று அலுவலர்கள் அனு, சுகந்தி, உதவி வேளாண் அலுவலர் வினோத்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.