/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவை சாகுபடி பணி துணை இயக்குனர் ஆய்வு
/
குறுவை சாகுபடி பணி துணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஜூலை 12, 2024 05:54 AM

சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் வட்டாரத்தில் சிறப்பு குறுவை தொகுப்பு திட்டப் பணிகளை கடலுார் வேளாண் துணை இயக்குனர் பிரேம்சாந்தி ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வரின் காவிரி டெல்டா சாகுபடி செம்மையாக செய்திடும் பொருட்டு 2024ம் ஆண்டிற்கான சிறப்பு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், டெல்டா பாசன கடைமடை பகுதியான கீரப்பாளையம் வட்டார கிராமங்களில் விவசாயிகள் 7,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நெல்நடவு செய்துள்ளனர். சி.சாத்தமங்கலம் பகுதியில் கடலுார் வேளாண் துணை இயக்குனர் பிரேம்சாந்தி ஆய்வு செய்தார்.
குறுவை சாகுபடியில் இயந்திர நடவிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 4,000 ரூபாயும், விதைநெல் 50 சதவீத மானியம், ஜிங்க்சல்பேட் ஜிப்சம், இடுபொருட்களுக்கு ஊக்கத்தொகையாக 250 ரூபாய் மானியமும், நெல் நுண்ணுாட்ட கலவைக்கு ஊக்கத்தொகை 200 ரூபாய் மானியமும் வழங்கப்பட உள்ளதாக விவசாயிகளிடம் தெரிவித்தார்.
ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக ஒரு ஏக்கர் மட்டுமே மானியம் என்றும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயனடைய கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உழவன் செயலி மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தினார். கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், துணை வேளாண் அலுவலர் ராயப்பநாதன், உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆய்வின்போது உடனிருந்தனர்.