/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்பிடி விசைப்படகுகள் கடலுாரில் ஆய்வு
/
மீன்பிடி விசைப்படகுகள் கடலுாரில் ஆய்வு
ADDED : மே 15, 2024 11:12 PM
கடலுார்: கடலுார் துறைமுகம் பகுதியில் மீனவர்களின் விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக கிழக்கு கடற்கரை கடல் பகுதியில், மீன்வளத்தை பாதுகாக்க கடந்த ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14 வரையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.
கடலுார் மாவட்டத்தில் 276 விசைப் படகுகள், 3,500 நாட்டுப் படகுகள் உள்ள நிலையில், தடைக் காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசின் விதிமுறைகளின்படி படகுகளில் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளதா, பெயிண்டிங் செய்து, எண் குறிப்பிடப்படுகிறதா உள்ளிட்ட விவரங்களை, கடலுார் மாவட்டத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
கடலுார் மீன்பிடி துறைமுகத்தில், விழுப்புரம் சரக மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், கடலுார் உதவி இயக்குனர் யோகேஷ் ஆய்வு செய்தனர்.