/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் நகராட்சியில் திட்டப்பணிகள் ஆய்வு
/
நெல்லிக்குப்பம் நகராட்சியில் திட்டப்பணிகள் ஆய்வு
ADDED : ஆக 21, 2024 07:50 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெறும் திட்டபணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
திருக்குளத்தில் குப்பையை தரம் பிரித்து அகற்றும் பணியை பார்வையிட்டார். விரைவில் பணியை முடித்து அந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார். பாரதியார் தெருவில் நடைபெறும் சாலை பணி, முள்ளிகிராம்பட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணி, ரூ. 2 கோடியில் கட்டப்படும் எரிவாயு தகன மேடை, நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 2 கோடியில் நடைபெறும் கட்டட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர், பணிகளை தரமாகவும் குறித்த காலத்திலும் முடிக்க உத்தரவிட்டார்.
சேர்மன் ஜெயந்தி, துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், வி.சி., நகர செயலாளர் திருமாறன், கவுன்சிலர் சத்தியா உடனிருந்தனர்.