ADDED : ஜூன் 16, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சரவணன் பொறுப்பேற்று கொண்டார்.
கடலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவியில் இருந்த நாகராஜ பூபதி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் மாற்றம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி வகித்து வந்த சரவணன் கடலுார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். நேற்று சரவணன் கடலுார் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
